கல-ச-ச-ரக- ன-ண-க-க-

Carranza வில் இருக்கும் டொரொன்டோ தனிநபர் காயத்திற்கான வழக்கறிஞர்கள் மொழித்தடையை தாண்ட உதவுவதல்லாமல், எழக்கூடிய எந்தவிதமான கலாச்சாரப் பிரச்சினைகளுக்கும் நாங்கள் உதவமுடியும்:

  • பாரம்பரியமானவற்றுக்கு எதிரான நவீன மருந்து மற்றும் மருந்துப்பொருட்கள் பற்றிய முரண்பாடுகள்
  • அன்பிற்கினியவர்களுக்கு மருத்துவப் பிரச்சனைகளை தெரிவித்தல் மற்றும் புனர் வாழ்வளிக்கும் குழுக்கள் மற்றும் குடும்பத்தின் முடிவுகளை மேற்கொள்ளும் முக்கிய நபர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தல்
  • அங்க அசைவு மொழி மற்றும் வேறுவித  அர்த்தப்படுத்தல்கள் எவ்வாறு உங்கள் பராமரிப்பை பாதிக்கக்கூடும் என்பதை விளக்குதல்
  • பராமரிப்பு, சிகிச்சை மற்றும் நிவாரணம் மீது மதத்தின் தாக்கம்
  • வெட்கம், மனச்சோர்வு மற்றும் தனித்துவிடப்படுதல் ஆகியவற்றைச்  சூழ்ந்து எழும் கலாச்சார இழுக்குகள்
  • ஊட்டச்சத்து, சரிவிகித உணவுமுறை மற்றும் மூலிகை நிவாரணிகளின் பயன்பாட்டின் முக்கியத்துவம்
  • குடும்பம், அவர்களின் சமூக அந்தஸ்து மற்றும் எதிர்கால சாத்தியங்களை மூளைக்காயங்கள் எப்படி பாதிக்கின்றன
  • குடும்பத்தினரின் நம்பிக்கைகள் மற்றும் கனடா நாட்டின் உடல் ஆரோக்கியப் பராமரிப்புத் திட்டத்திற்கும் இடயிலான இணைப்பை ஏற்படுத்தல்

ஒரு வழக்கில் கலாசாரப் பிரச்சனைகள் பற்றிய உண்மை உதாரணங்கள்

ஆங்கிலம் உங்களுடைய முதல் மொழியாக இல்லாததன் சிரமம் எப்படி இருக்கும் என Carranza வில் நாங்கள் புரிந்திருக்கிறோம். உங்கள் வழக்கினை பெரும்பாலும் கலாச்சார பேதங்கள் பாதிக்கலாம். சரியான பிரதிநிதித்துவம் கொள்வது ஒரு பெரிய வித்தியாசத்தை உண்டாக்கலாம்.

 அதிகாரிகளின் பார்வை

எங்கள்  கட்சிக்காறர்களில் ஒருவர், காவல்துறை ஊழல் மிக்கதாகவும் வன்முறை கொண்டதாகவும் உள்ள ஒரு நாட்டில் வளர்ந்தார். வாழ்க்கையின் ஆரம்பத்தில் கேள்வி ஏதும் கேட்காமல் காவல்துறைக்கு பயந்தும் பணிந்தும் இருக்க அவர் கற்றுக்கொண்டார்.

கனடாவில், ஒரு கார் விபத்தில் அவர் சிக்கினார். மற்றைய வாகனம் சிவப்பு விளக்குக்கு ஊடாக ஓடியபோதும் தவறான திருப்பம் செய்ததாக இவருக்கு ஒரு வீதி ஒழுங்கு அபராதச் சீட்டு வழங்கப்பட்டது. அதிகாரி அபராதத்தை கட்டச் சொன்னார், மற்றும் விபத்துக்கு அவர் காரணமானவர் அல்ல எனத் தெரிந்த போதும்  கட்சிக்காறர் பணிந்தார்.

இதன் விளைவாக சேதங்களுக்கான சிவில் வழக்கில், எங்கள் கட்சிக்காறர் அபராதச்சீட்டுக்குக் தொகை செலுத்தியதே, தவறாகத் திருப்பம் செய்து விபத்தினை உண்டாக்கியதற்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளுவதாகும் என காப்பீட்டு நிறுவன வழக்கறிஞர் வாதிட்டார். தனது சொந்த நாட்டில் எங்களது  கட்சிக்காறரின் முந்தைய அனுபவம் எங்களுக்கு தெரியுமாகையினால், காவல் அதிகாரியுடனான அவரது நடத்தையை நாங்கள் செய்து காட்ட முடிந்ததுடன், எதிராளி ஓட்டுனர்தான் 100% தவறிழைத்தார் என்ற அடிப்படையில் கோரிக்கையை தீர்வு செய்ய முடிந்தது.