எங-கள- ஆழ-ந-த கவனம-

ஒரு வழக்கறிஞர் சட்டம் மற்றும் சட்டத்தின் கட்டமைப்பினை மட்டும் புரிந்துகொள்வது இனி போதாது என ஒரு நிறுவனமாக, Carranza வில் இருக்கும் நாங்கள் நினைக்கிறோம்; முறையான பிரதிநிதித்துவம் அளிக்க, உங்களுடைய தனித்துவமான சூழ்நிலைகள், உங்கள் மொழி மற்றும் உங்கள் கலாச்சாரத்தினையும்கூட நாம் புரிந்துகொள்ள வேண்டும். அனுபவமிக்க சட்ட பிரதிநிதித்துவத்தினை 24க்கும் மேலான மொழிகளில் அளிப்பதற்காக நாங்கள் எங்களது தரத்தினை அமைத்துள்ளோம் மற்றும் உங்கள் வழக்கிற்கு நியமனம் செய்யப்பட்ட சட்டக்குழுவானது ஒரு நல்ல கலாச்சார பொருத்தமானதாக இருப்பதை நாங்கள் உறுதி செய்வதால், எந்த ஒரு முக்கிய விபரங்களும் விடுபட்டுப்போகாமல் இருக்கும். பல்வேறான மொழிகளைப் பேசுவதுடன் கூடவே, எங்கள் அலுவலர்களில் பலரும் முதலாவது மற்றும் இரண்டாவது தலைமுறை கனடா நாட்டவர்கள் என்பதால் புலம் பெயர்ந்தவர்களை மட்டுமின்றி, மோசமான கார் விபத்துக்களைத் தொடர்ந்து வரும் துயரத்தையும் கூட நன்றாக புரிந்துகொள்ள ஏதுவாகிறது.

டொரொன்டோ வின் மிகப்பரந்த தனிநபர் காயத்திற்கான சட்ட நிறுவனமாக ஒண்ட்டேரியோ வின் வேறுபட்ட சமுதாயங்களுக்கு சேவையாற்றுவது எங்களுக்கு முதல் நிலை அனுபவத்தையும் மற்றும் சுய தன்னுணர்வுகள், முன்கருத்தாக்கங்கள் மற்றும் மொழிபெயர்ப்புப் பிழைகள் ஆகியவை எப்படி உங்கள் சிகிச்சையை, அல்லது காப்பீட்டு மருத்துவர்கள், போலீஸ், பணியமர்த்துபவர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் உண்டாக்கும் ஆவணங்களை மோசமாக சலனப்படுத்தும் என்பதற்கான உள்ளுணர்வினையும் அளித்துள்ளது..

காப்பீட்டினை சரியாக்குபவர்கள், மத்தியஸ்தர்கள், நீதிபதிகள், ஜூரிகள் ஆகியோரின் தன்னுணர்வுகள் உங்கள் தீர்வின் மீது செல்வாக்கைச் செலுத்தும். பெரும்பாலும் அவர்கள் உங்களுடைய பின்னணி மற்றும் கலாச்சாரம் பற்றி நன்றாகத் தெரியாதவர்களாக இருப்பார்கள், மற்றும் உங்கள் இழப்பீட்டினை எதிர்மறையாக பாதிக்கும் அனுமானங்களையே செய்வார்கள்.

ஒரு தனிநபர் காயத்திற்கான கோரிக்கையில் கீழ்கண்டவைகள் உள்ளிட்ட பலவேறு காரணிகளின் அடிப்படையில் உங்கள் இழப்பீடு இருக்கும்:

  • உங்கள் கல்வி, பயிற்சி மற்றும் பணித்திறனை உங்கள் காயங்கள் எப்படி பாதித்தன
  • உங்கள் குடும்பம் மற்றும் நிதிநிலை
  • சமூக மற்றும் புத்துணர்வூட்டும் செயல்பாடுகள்
  • உங்கள் வாழ்வின் மீது விபத்து கொண்டிருந்த தாக்கம்

உங்கள் கலாச்சாரம்  மற்றும் பெரும்பாலும் நிகழும் தவறான உட்கருத்துக்கள் என்பவற்றை புரிந்துகொள்ளல் மூலமாக உங்கள் வாழ்வில் ஏற்படும் இடையூறுகளின் அளவினை நாங்கள் சிறப்பக எடுத்தியம்ப ஏதுவாகிறது.

உதாரணத்திற்கு, கனடாவில் வேலை தேடும்போது, புதிய குடியிருப்புவாசிகள் சில சமயங்களில் தற்காலிகமான, குறைந்த வருவாய் தரும் வேலைகளை எடுத்துக்கொள்கிறார்கள், இவற்றுக்கு அவர்களின் கல்வித்தகுதி அதிகம். இது அவர்களின் உண்மையான வருவாய் ஈட்டும் திறன் என காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் வசதிக்கு அனுமானித்துக் கொள்கின்றன.

எனினும், உங்களுடைய எதிர்கால வருவாய் ஈட்டும் திறனுக்கான மிகத்துல்லியமான உயர்ச்சியைக் காட்டும் வரைபடத்தினை உருவாக்கத் தேவையான அனுபவத்தினை நாங்கள் கொண்டிருக்கிறோம்.