குழந்தைகளின் காயம்

விரைவான மேலோட்டப் பார்வை

மோசமான காயங்களினால் அவதிப்படும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் உயர் சிறப்பு கொண்ட பராமரிப்பு தேவை. உடல் வளர்ச்சி, உணர்வு ரீதியான திறன்களை சமாளித்தல், மற்றும் ஒருங்கிணைப்பு செயல்முறைகள் மீதான விளைவுகளின் ஒரு தொகுப்பினை உங்கள் குழந்தையின் உடல்கட்டு மீதான துயரம் கொண்டிருக்கலாம்.

உங்களுடைய குழந்தையின் சட்டப்படியான உரிமைகள் காக்கப்படுகிறது மற்றும் அவர்கள் மிகச்சிறந்த பிரதிநிதித்துவத்தைப் பெறுகின்றனர் என்பதை உறுதி செய்ய, குழந்தை காயத்திற்கான எங்களுடைய வழக்கறிஞர்கள் உங்கள் குழந்தையின் விஷயத்தில் தனித்துவமான சூழ்நிலைகளுக்குள் முழுமையான ஒரு விசாரணையை நடத்துவார்கள்.

குழந்தைகளின் காயம்

கலாச்சாரக் ன்ணோக்கு

Carranza வில் இருக்கும் டொரொன்டோ தனிநபர் காயத்திற்கான வழக்கறிஞர்கள் மொழித்தடையை தாண்ட உதவுவதல்லாமல், எழக்கூடிய எந்தவிதமான கலாச்சாரப் பிரச்சினைகளுக்கும் நாங்கள் உதவமுடியும்:

 • பாரம்பரியமானவற்றுக்கு எதிரான நவீன மருந்து மற்றும் மருந்துப்பொருட்கள் பற்றிய முரண்பாடுகள்
 • அன்பிற்கினியவர்களுக்கு மருத்துவப் பிரச்சனைகளை தெரிவித்தல் மற்றும் புனர் வாழ்வளிக்கும் குழுக்கள் மற்றும் குடும்பத்தின் முடிவுகளை மேற்கொள்ளும் முக்கிய நபர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தல்
 • அங்க அசைவு மொழி மற்றும் வேறுவித அர்த்தப்படுத்தல்கள் எவ்வாறு உங்கள் பராமரிப்பை பாதிக்கக்கூடும் என்பதை விளக்குதல்
 • பராமரிப்பு, சிகிச்சை மற்றும் நிவாரணம் மீது மதத்தின் தாக்கம்
 • வெட்கம், மனச்சோர்வு மற்றும் தனித்துவிடப்படுதல் ஆகியவற்றைச் சூழ்ந்து எழும் கலாச்சார இழுக்குகள்
 • ஊட்டச்சத்து, சரிவிகித உணவுமுறை மற்றும் மூலிகை நிவாரணிகளின் பயன்பாட்டின் முக்கியத்துவம்
 • குடும்பம், அவர்களின் சமூக அந்தஸ்து மற்றும் எதிர்கால சாத்தியங்களை மூளைக்காயங்கள் எப்படி பாதிக்கின்றன
 • குடும்பத்தினரின் நம்பிக்கைகள் மற்றும் கனடா நாட்டின் உடல் ஆரோக்கியப் பராமரிப்புத் திட்டத்திற்கும் இடயிலான இணைப்பை ஏற்படுத்தல்

ஒரு வழக்கில் கலாசாரப் பிரச்சனைகள் பற்றிய உண்மை உதாரணங்கள்

ஆங்கிலம் உங்களுடைய முதல் மொழியாக இல்லாததன் சிரமம் எப்படி இருக்கும் என Carranza வில் நாங்கள் புரிந்திருக்கிறோம். உங்கள் வழக்கினை பெரும்பாலும் கலாச்சார பேதங்கள் பாதிக்கலாம். சரியான பிரதிநிதித்துவம் கொள்வது ஒரு பெரிய வித்தியாசத்தை உண்டாக்கலாம்.

அதிகாரிகளின் பார்வை

எங்கள் கட்சிக்காறர்களில் ஒருவர், காவல்துறை ஊழல் மிக்கதாகவும் வன்முறை கொண்டதாகவும் உள்ள ஒரு நாட்டில் வளர்ந்தார். வாழ்க்கையின் ஆரம்பத்தில் கேள்வி ஏதும் கேட்காமல் காவல்துறைக்கு பயந்தும் பணிந்தும் இருக்க அவர் கற்றுக்கொண்டார்.

கனடாவில், ஒரு கார் விபத்தில் அவர் சிக்கினார். மற்றைய வாகனம் சிவப்பு விளக்குக்கு ஊடாக ஓடியபோதும் தவறான திருப்பம் செய்ததாக இவருக்கு ஒரு வீதி ஒழுங்கு அபராதச் சீட்டு வழங்கப்பட்டது. அதிகாரி அபராதத்தை கட்டச் சொன்னார், மற்றும் விபத்துக்கு அவர் காரணமானவர் அல்ல எனத் தெரிந்த போதும் கட்சிக்காறர் பணிந்தார்.

இதன் விளைவாக சேதங்களுக்கான சிவில் வழக்கில், எங்கள் கட்சிக்காறர் அபராதச்சீட்டுக்குக் தொகை செலுத்தியதே, தவறாகத் திருப்பம் செய்து விபத்தினை உண்டாக்கியதற்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளுவதாகும் என காப்பீட்டு நிறுவன வழக்கறிஞர் வாதிட்டார். தனது சொந்த நாட்டில் எங்களது கட்சிக்காறரின் முந்தைய அனுபவம் எங்களுக்கு தெரியுமாகையினால், காவல் அதிகாரியுடனான அவரது நடத்தையை நாங்கள் செய்து காட்ட முடிந்ததுடன், எதிராளி ஓட்டுனர்தான் 100% தவறிழைத்தார் என்ற அடிப்படையில் கோரிக்கையை தீர்வு செய்ய முடிந்தது.

குழந்தைகளின் காயம்

நாங்கள் எப்படி உதவ முடியும்

ஒரு காயம் தங்கள் வாழ்க்கை மற்றும் நிதி நிலைமையை எவ்வளவுக்கு பாதிக்கலாம் என்பதையிட்டு குடும்பங்கள் பெரும்பாலும் ஆச்சரிப்பட்டும் அயர்ந்தும் போகின்றனர். உங்களுடைய தற்போதைய நிலையை சிறப்பாக புரிந்து கொள்ள ஒரு அனுபவமிக்க தனிநபர் காயத்திற்கான வழக்கறிஞர் உதவவும் மற்றும் உங்களுடைய சட்டப்படியான உரிமைகளை விளக்கவும் முடியும்.

Carranza வில், உங்களை சந்திக்கும் அந்தக் கணத்தில் எங்களது ஈடுபாடு துவங்குகிறது. ஒவ்வொரு பரஸ்பர செயல்பாட்டில் மூலம், எங்களின் மிகச்சிறந்த திறமைகளின்படி நீங்கள் வசதியாக, பாதுகாப்பாக மற்றும் துணை கொண்டிருப்பதாக உணர வைக்க நாங்கள் பாடுபடுகிறோம்.

உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் தேவைகளை சீராக பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதில் நாங்கள் கடப்பாடு கொண்டிருக்கிறோம், கனடா வின் ஒரே ISO சான்றளிக்கப்பட்ட தனிநபர் காயத்திற்கான சட்ட நிறுவனமாக Carranza ஆகிவிட்டது.

வாடிக்கையாளர் சேவையில் மிக உயர்வான தரத்திற்கு எங்களது நிறுவனம் வைக்கப்பட்டிருக்கிறது, எங்களது தகவல் பரிமாற்றம், எங்களது பயிற்சி மற்றும் எங்களது செயல்முறைகள் ஆகியவற்றை தொடர்ச்சியாக மேம்படுத்துகிறோம், என்பதை இந்த ISO சான்றிதழ் உறுதி செய்கிறது. நாங்கள் செய்யும் அனைத்துக்கும் நீங்களே மையமாக இருப்பவர் என்பதால் நாங்கள் இதனைச் செய்தோம். நீங்கள் முக்கியமானவர் என்பதால், நாங்கள் இதனைச் செய்தோம்.

Carranza வில், எங்களது பணியானது வழக்கு மூலமாக உங்களுக்கு உதவுவதைக் காட்டிலும் அதிகமானது; உங்களுடைய புனர் வாழ்வுக்கான சரியான ஆதாரவளங்களும் உங்களுக்கு இருப்பதை உறுதிசெய்வதும் எங்களுடைய பொறுப்பாக இருக்கிறது. உங்களுடைய மருத்துவ மற்றும் புனரமைப்புக் குழுக்கள் நீங்கள் நிவாரணம் அடைய உதவ கடினமாக உழைக்கிறது. உங்களுடைய உடல், உணர்வு, மானசீக மற்றும் சமூகரீதியான தேவைகளுக்கும் அவர்கள் முகம் கொடுப்பார்கள். அவர்களுடன் நாங்கள் நெருங்கிப் பணியாற்றுகிறோம் என்பதால், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் புனர்வாழ்வு சிகிச்சைகள் மற்றும் உதவிகரமான சாதனங்களின் கூடுதல் செலவுகள் பற்றி கவலைப்பட வேண்டாம்.

உங்களை கவனித்துக்கொள்ளுங்கள்.

மற்றவற்றை நாங்கள் கவனித்துக்கொள்வோம்.

குழந்தைகளின் காயம்

இழப்பீட்டுக்கான உங்களுடைய விருப்பத்தெரிவுகள்

ஒரு வாகன விபத்தில் நீங்கள் சிக்கினால் உதவி காத்திருக்கிறது.

நீங்கள் தகுதி பெறுபவை:

விபத்துப் பெறுநலன்கள்

விபத்துக்கான தவறிழைத்தவர் நீங்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைத்து ஒண்ட்டாரியோ வாகனக் காப்பீட்டுப் பாலிசிகளும் சட்டப்படியான விபத்துப் பெறுநலன்கள் அட்டவணைப்படி (SABS) கட்டாயப் பெறுநலன்களை அளிப்பார்கள்.

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சார்ந்திருப்பவர்கள் விபத்தில் சம்பந்தப்பட்டிருக்காவில்லாலும் கூட சிலபெறுநலன்களுக்கு அவர்கள் தகுதியாகின்றனர். இந்த நாட்டில் உங்கள் சட்டப்படியான வசிப்பிட அந்தஸ்து ஒரு பொருட்டில்லாமல் விபத்துப் பெறுநலன்கள் கோரப்படலாம்.

இயலாமை காப்பீடு

உங்கள் பணி அல்லது தனியார் பாலிசியில் இருந்து குறுகிய கால அல்லது நீண்டகால இயலாமை பெறுநலன்களுக்கு உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பெறுநலன்கள் அனைத்தும் எப்போதும் ஆரம்ப நிலையானவை. உங்கள் தனியார் இயலாமை பாலிசி உள்ளடக்காதவற்றை மட்டுமே உங்கள் கார் காப்பீடு உள்ளடக்கும்.

தவறிழைப்பு அடிப்படையிலான வழக்கு தாக்கல்கள்

விபத்துபெறுநலன்கள் கோரிக்கைகளுடன் கூடவே விபத்துக்கு பொறுப்பான நபர் அல்லது நபர்கள் மீதும் நீங்கள் வழக்கு தொடுக்கலாம்.

சேதத்திற்கான கோரிக்கை எனப்படும் இந்த வகை கோரிக்கை, நாடும் இழப்பீடுகள் வகை:

 • வலி மற்றும் வேதனை
 • பொருளாதார இழப்புக்கள் (உ.ம். தற்போதைய மற்றும் எதிர்கால வருமான இழப்பு)
 • வருமானம் ஈட்டும் திறனிழப்பு
 • எதிர்கால மருத்துவ சிகிச்சை மற்றும் பராமரிப்புக்கான செலவு
 • எதிர்கால உதவியாளர் பரமரிப்பு செலவு
 • வீட்டுப்பணி மற்றும் பராமரிப்பு அளித்தல் தேவைகளின் செலவுகள்
 • கைச்செலவுகள்
 • பகிர்ந்துகொள்ளப்பட்ட குடும்ப வருமான இழப்பு
 • குடும்பத்தில் நெருக்கமானவர்களை சிரமப்படுத்தும் பராமரிப்பு, வழிகாட்டுதல் மற்றும் துணையிருப்பு ஆகியவற்றின் இழப்பு
 • விபத்து காரணமாக நிகழும் குடும்ப அங்கத்தினர்களின் பொருளாதார இழப்புக்கள்

உங்கள் வழக்கின் விபரங்களை திட்டமாக புரிந்துகொண்டவுடன், என்ன நிவாரணம் நீங்கள் எதிர்பார்க்க முடியும் என்பதன் கணிப்பினை நாங்கள் அளிக்க இயலும். உங்களுக்கு கிடைக்கப்பெற இருக்கும் இழ்ப்பீடுகளின் ஒவ்வொரு வழிகளையும் நாங்கள் தேடுகிறோம். மீட்டுப்பெறும் ஒவ்வொரு டாலரும் உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கு எவ்வளவு முக்கியமானது என நாங்கள் அறிவோம்.

சட்டப்படியான விபத்துப் பெறுலன்கள் அட்டவணையில் (Statutory Accident Benefits Schedule) செப்டம்பர்1, 2010 தினம் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் நீங்கள் எதற்கு தகுதியாக உள்ளீர்கள் என அறிந்துகொள்ள நீங்கள் ஒரு வழக்கறிஞரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். நீங்கள் எதற்கு தகுதியுடையவர்களாக இருக்கிறீர்கள் என்பதன் ஒரு அச்சிடக்கூடிய மேலோட்டப் பார்வைக்கு,

இங்கு கிளிக் செய்க.

குழந்தைகளின் காயம்

கால வரம்புகள்

பொதுவாக, உரிய பலன்களுக்காக நீங்கள் விண்ணப்பித்த பிறகு மட்டுமே எந்த சிகிச்சை அல்லது செலவுகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்கள் தொகை செலுத்தும் என்பதால், உங்களுக்குத் தேவைப்படும் அனைத்து பெறுநலன்களுக்காகவும் நீங்கள் கூடிய விரைவில் விண்ணப்பிப்பது முக்கியமாகும். கண்டிப்பான கால வரம்புகள் பிரயோகமாகும். இந்த வரம்புகளை நாங்கள் கவனித்துக்கொள்வோம் என்பதால், உங்கள் நிவாரணத்தின் மீது நீங்கள் கவனம் செலுத்த முடியும்.

மனத்தில் இருத்த வேண்டிய முக்கிய சில வரம்புகள்:

7 நாட்கள் – விபத்துப் பெறுநலன்களுக்கான காப்பீட்டு நிறுவனத்திற்கு விபத்து பற்றியும் நீங்கள் காயமடைந்ததாகவும் கூற வேண்டும்.

30 நாட்கள் – காப்பீட்டு நிறுவனத்தினால் உங்களுக்கு அளிக்கப்பட்ட விபத்துப்பெறுநலன்களுக்கான விண்ணப்பத்தினை விபத்திலிருந்து 30 நாட்களுக்குள் நீங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். நீங்கள் அதிக காலம் எடுத்துக்கொண்டால், காப்பீட்டு நிறுவனம் உங்கள் பெறுநலன்களை 45 நாட்களுக்கு மேலாக தாமதப்படுத்தலாம் மற்றும் மொத்தப் பெறுநலன்களையும் மறுக்கக் கூடும்.

120 நாட்கள் – தவறிழைத்த தரப்பினர் மீது வழக்கு தொடுப்பதற்கான உங்களது உத்தேசத்தினை நீங்கள் எழுத்துபூர்வமான அறிவிப்பாக கொடுப்பது தேவை.

2 வருடங்கள் – உங்களுக்கான பெறுநலன்கள் மறுக்கப்பட்டால் தவறிழைத்த ஓட்டுனர் அல்லது உங்களுடைய காப்பீட்டு நிறுவனத்தின் மீது ஒரு சட்ட வழக்கு துவக்க.

உங்கள் உரிமைத்தொகையை தீர்மானிக்க காப்பீட்டு நிறுவனத்திற்கு தேவைப்படும் அனைத்து தகவல்களையும் நீங்கள் அளிக்க வேண்டும். அவ்வாறான தகவல்களை அவர்கள் வேண்டிய பின்னர் உங்களுக்கு 10 வெலை நாட்கள் உள்ளன, இல்லையெனில் அவர்கள் உங்கள்பெறுநலன்களை இடைநிறுத்தலாம் அல்லது மறுக்கலாம்.

குழந்தைகளின் காயம்

கோரிக்கைக்கு ஒவ்வாதது

இந்த கையேடு காயம்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான ஒரு பொதுவான ஒப்பீட்டு நோக்கலுககானது. இந்தக் கையேட்டில் இருக்கும் மருத்துவ மற்றும் சட்டப்படியான தகவல்கள் சட்ட மற்றும் மருத்துவ ஆலோசனைஅளிப்பதற்காக உத்தேசிக்கப்பட்டது அல்ல. இந்த கையேடு இருக்கும் உட்பொருட்கள் தகவல் மற்றும் கல்விபுகட்டல் நோக்கங்களுக்கு மட்டுமேயானது மற்றும் ஒரு சட்ட மற்றும்/அல்லது உடல் ஆரோக்கியப்பராமரிப்பு தொழில்தகைமையாளரின் தொழில்ரீதியான தீர்வுக்கு ஒரு மாற்றாக உத்தேசிக்கப்படவில்லை, மற்றும் சட்ட மற்றும் மருத்துவ ஆலோசனைக்காக இந்த கையேடு இருக்கும் எந்த விஷயங்கள் அல்லது அறிக்கைகள் மீதும் நீங்கள் சார்ந்திருக்கக் கூடாது. இது செவை வழங்குனர் வாடிக்கையாளர் உறவுமுறையை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டு அமைகப்படவில்லை. உங்களுடைய உடல் ஆரோக்கியம் அல்லது பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான எந்த முடிவுகளையும் செய்வதற்கு முன்னதாக எந்த மருத்துவத் தகவல்களையும் உங்கள் மருத்துவர் அல்லது உடல் ஆரோக்கியப் பராமரிப்பு தொழில்தகைமையாளருடன் கவனமாகப் பரிசீலனை செய்வது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த கையேடு இருக்கும் தகவல்களின் துல்லியத்தினை உறுதி செய்ய நியாயமான முயற்சிகள் செய்யப்பட்டிருக்கும் வேளையில், தகவல்களின் துல்லியம் அல்லது முழுமை பற்றிய வெளிப்படையான அல்லது உள்ளார்ந்த வெளிப்பாடுகள் அல்லது உத்தரவாதங்களை எங்கள் நிறுவனம் அளிக்க முடியாது. ஒவ்வொரு நபரின் சட்டத் தேவைகள் தனித்தன்மையானவை, மற்றும் இந்த விஷயங்கள் உங்கள் சட்ட சூழலுக்கு பொருந்தாமல் இருக்கலாம். உங்களுடைய குறிப்பிட்ட தனிநபர் காயத்திற்கான விஷயத்தின் மீதான ஆலோசனைக்காக தயவு செய்து ஒரு ஒண்ட்டாரியோ தனிநபர் காயத்திற்கான வழக்கறிஞரை தொடர்பு கொள்ளவும்.